கடந்த 10 ஆண்டுகாலம் நிதித்துறை அமைச்சராக இருந்து அரசு கஜானாவை சுரண்டியவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மக்களுக்காக தொண்டு செய்கின்ற இயக்கத்தை அண்ணாமலை போன்றவர்கள் விமர்சித்துப் பேசுவதற்கு பதில் சொல்வது என்பது கூட சரியாக இருக்காது என்பது என்னுடைய கணிப்பு. ஏனென்று சொன்னால் இந்த இயக்கம் எதற்காக துவங்கப்பட்டது என்பதை கூட நம்முடைய சகோதர அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிர்க்கட்சி அதைக் கூட சொல்ல ஜனநாயகத்தில் உரிமை இல்லை என்றால் வேறு எப்படி எதிர்க்கட்சி நடத்துவது.
அவர்கள் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு போனார்கள். அதைத் தள்ளுபடி செய்தார்களா? இப்போது இந்த அரசாங்கம் நாங்கள் கணக்கெடுத்து தள்ளுபடி பண்ணிக் கொண்டிருக்கிறோம். அதனால் அவர்கள் சொன்னது எல்லாம் அவர்கள் செய்தது கிடையாது. நான் எதிர் கட்சி சட்டமன்ற தலைவராக இருந்தபோது பல கேள்வி கேட்டேன் அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. 10 ஆண்டுகாலம் நிதி அமைச்சராக இருந்த ஓபிஎஸ் இந்த நாட்டையே சுரண்டி எடுத்து கல்லாப்பெட்டியை காலி பண்ணி போட்டவர். அவர் போய் எங்களை பற்றி சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று பேசியுள்ளார்.