Categories
அரசியல்

எல்லாத் துன்பங்களையும் நான் தாங்குவேன்… எவருக்கும் அஞ்ச மாட்டேன்… ராகுல் காந்தி அதிரடி ட்விட்…!!!

பொய்யை உண்மையுடன் வெல்லும் போது வரும் எல்லாத் துன்பங்களையும் என்னால் தாங்க முடியும் என காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நம் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரின் பிறந்த நாளையொட்டி அனைத்து அரசியல் தலைவர்களும் தங்கள் மரியாதையை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவ்வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “உலகில் உள்ள எவருக்கும் நான் அஞ்ச மாட்டேன். எவருடைய அநீதிக்கும் நான் ஒரு போதும் தலை வணங்க மாட்டேன். அனைத்து பொய்களையும் உண்மையுடன் வென்று காட்டுவேன். பொய்களை எதிர்கொள்ளும்போது வரும் அனைத்து துன்பங்களையும் என்னால் கட்டாயம் தாங்க முடியும்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |