Categories
அரசியல்

எல்லாமே கொடுக்குறோம்…. அரசு ரெடியா இருக்கு… விஜயபாஸ்கர் ட்விட்

உலகையே மிரட்டி வரும் கொரோனா  வைரஸ் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் நடுங்க வைத்துள்ளது. பாமரமக்கள் தொடங்கி பிரதமர் வரை தனது வீரியத்தை காட்டியுள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பல நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கூட ஆளுநர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட வரிசையில் இருந்து வருகின்றனர்.

இதில் பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியனும் அடங்கும். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும், அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது.அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Categories

Tech |