Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாமே சும்மா…! பேசுறதெல்லாம் நடிப்பு… ஜாதி பாக்குறாங்க… தம்பிகள் மனக்குமுறல் …!!

கடந்த நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ராஜீவ் காந்தி தலைமையில் இந்த இணைப்பு நடைபெற்றது. திமுகவில் இணைந்த பிறகு பல நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர் கனி, நாம் தமிழர் கட்சியில் 8 ஆண்டுகளாக பயணித்து வருகின்றேன்.

ஆரம்பத்துல் சீமான் சரியா பயணித்தார்.  போகப்போக  கட்சிக்கு உழைப்பவர்களை புறக்கணிக்க மாதிரி நடந்து  கொண்டார். ஜாதி பார்த்து ஓட்டு போட்டா தீட்டு என சொல்கிறார்கள். ஆனால்  வெளிப்படையாக ஜாதி கேட்டு தான் பொறுப்பு போடுகிறார்கள். சமத்துவமாக வந்து எல்லாருக்கும் பொறுப்பு போடணும் என்று சொல்கிறார்கள், ஆனால் நிர்ணயிக்கிறவர்கள் குறிப்பிட்ட சமூகமாக  இருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் எல்லாரையும் சமத்துவமாக பார்க்கணும், சமத்துவமாக போடணும்,  எல்லாருக்கும் சமூக நீதி கிடைக்கணும் என்கிறார்கள்.

ஆனால் பொறுப்பு போடுகிறவர்கள் சமூகநீதியோடு இருந்து போடணும். பொறுப்பு போடுவதற்கு 8 பேர் வந்திருக்கிறார்கள் என்றால், அந்த 8 பேரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அந்த இடத்தில் சமூகநீதி கிடையாது. இருந்தா இரு… நான் சொல்லுறத கேட்டா கேளு… இல்லன்னா வெளியேறு அப்படி சொல்லுறாரு.இப்படி பேசினால் இந்த தளத்தில் இருப்பதற்கு எங்களுக்கு என்ன சுயமரியாதை இருக்கிறது ? இது சரியா தெரியல. எனவே நாங்களும் பாதிக்கப்பட்ட ராஜிவ் காந்தியோடு நிற்பது தான் அறம் என அங்கிருந்து விலகினோம்.

 எந்தக் காரணமும் இல்லாமல் சும்மா துரோகி… துரோகி என்ற பெயரை மட்டும் சொல்லிக் கொண்டு திரிந்தார்கள்.கட்சியை விட்டு நீக்க போகிறார்கள் என்றால் காரணம் கேட்கணும்,  குறைந்தபட்சம் கூப்பிட்டு கேட்கணும். இந்த காரணத்துக்காக நீக்கியுள்ளோம் என சொல்லணும். மற்ற கட்சியில் நீக்கப்பட்டால் சொல்கிறார்கள் . அறிக்கை கொடுக்கின்றார்கள். சும்மா எதுவுமே கிடையாது. ராஜீவ் காந்திக்கே இந்த நிலைமை ஏற்பட்டால்  எங்கள மாதிரி நபர்களுக்கு என்னென்ன மாதிரி நடைபெறும். எனவே அவர் கூட நிக்கிறது எங்களுக்கு அறமாக தெரிந்தது எனவே அவரோடு நிற்கின்றோம் என தெரிவித்தார்.

Categories

Tech |