Categories
தேசிய செய்திகள்

எல்லாமே டீன் ஏஜ் பொண்ணுங்க தான்…. தலைநகரை அதிர வைக்கும் குற்ற சம்பவங்கள்…. பகீர் தகவல்….!!!

டெல்லியில் இணையவழி குற்ற வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் ஆண்டில் 111 சதவீதம் உயர்ந்து உள்ளது என தேசிய குற்ற ஆவணங்கள் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இதில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல் வழக்குகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி குற்றங்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, டெல்லி போலீசார் சமூக ஊடக மையம் ஒன்றை அமைத்து உள்ளனர். எனினும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த வழக்குகளில் பெருமளவில், இணையவழி மோசடி, ஆன்லைன் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தகவல்களை பகிருதல் ஆகியவற்றுடன் தொடர்புடைவை மட்டுமே காணப்படுகின்றன. கடந்த ஆண்டு, 356க்கும் கூடுதலான இணையவழி குற்ற சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டு ள்ளன. இவற்றில் குற்றச்சாட்டுக்கு ஆளான பலரும், பாலியல் செயல்கள் சார்ந்த தகவல்கள் அல்லது வீடியோக்கள் உள்ளிட்ட விசயங்களை பகிர்ந்துள்ளனர்.

புகார்கள் அளித்தவர்களில் பலர் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட டீன்-ஏஜ் சிறுமிகளாக உள்ளனர். இதுகுறித்து துணை காவல் ஆணையாளர் (இணையவழி குற்றம்) கே.பி.எஸ். மல்கோத்ரா கூறுகையில், கொரோனாவுக்கு பின்னர் நாங்கள் அதிகளவில் வழக்குகளை ஆன்லைன் வழியே பதிவு செய்து வருகிறோம். இவற்றில், நிதி மோசடி மற்றும் பாலியல் சார்ந்த மிரட்டல்கள் அதிகரித்து வருவதனை காண்கிறோம்” என்றார்.

Categories

Tech |