Categories
தேசிய செய்திகள்

எல்லாமே பண்ணுறோம்..! வாங்க பேசலாம்… இறங்கி வரும் மத்திய அரசு.. விவசாயிகளுக்கு அழைப்பு ..!!

டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் மற்றும் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே பிரதமர் மோடி, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உட்பட பல தலைவர்கள் விளக்கம் அளித்தும், சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

ஏற்கனவே நடைபெறவேண்டிய ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட சூழலில், அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சக இணைச் செயலாளர் விவேக் அகர்வால் எழுதிய கடிதத்தில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாகவும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் முடிவு செய்து தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகள் தெரிவிக்கும் கருத்துக்களை முடிந்த அளவுக்கு தீர்க்க மத்திய அரசு தயாராகவே இருப்பதாகவே அகர்வால் தெரிவித்தார்.

Categories

Tech |