பல அரசியல் தலைவர்களை பற்றி இழிவாக பேசிய துரைமுருகன் வழக்கில் உள்ளே சென்ற நிலையில் ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைவர்கள் குறித்து சாட்டை துரைமுருகன் ஆவேசமாக பேசி அவதூறு பரப்பினார். இதனால் திமுக தொண்டர்கள் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்வாறு நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும் உருவாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தென்காசி நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனை இரண்டு நிமிடங்கள் கூட சந்தித்து பேசியது கிடையாது. சீமானோடு பிரபாகரன் புகைப்படம் எடுப்பதற்கு விரும்பவில்லை. அப்படியிருக்கும் நிலையில் பிரபாகரன் பற்றி சீமான்பேசி வருவது முற்றிலுமாக பொய்.
ஆமை கறி சாப்பிட்டேன் என்று பொய் சொல்கிறார். பிரபாகரன் குறித்து பொய்யான தகவல்களை கூறி ஒன்றும் தெரியாத இளைஞர்களை தன்னுடைய கட்சிகள் கொண்டு வரும் வேலையை சீமான் செய்து வருகிறார். இதனால் சீமான் மீது விடுதலை புலிகள் புலிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.