கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிறிஸ்துதாஸ். இவர் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி ஆபாசமான பாடங்கள் சிலவற்றை நடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்துதாஸ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஆனால் ஆசிரியர் மீது தவறு இல்லை என்றும், அவர்மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கத்தினர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், தேர்வு ஒன்றில் மாணவிகள் சிலர் கேள்விகளுக்கு பதில் எழுதாமல் சினிமா பாடல்களை எழுதி வைத்திருந்ததாகவும், அதை பலர் முன்னர் கிறிஸ்துதாஸ் படித்து காண்பித்து கண்டித்ததால் பழி நடவடிக்கையாக போலியான குற்றச்சாட்டை வைத்துள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.