Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாமே போலி தான்…! மக்களை ஏமாற்றும்…. வஞ்சிக்கின்ற அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளில் என்ன சொன்னாங்க… நகை கடன் தள்ளுபடி, அதே போன்று மாணவர் கடன் தள்ளுபடி, மாதம் 1000 ரூபாய் இல்லத்தரசிகளுக்கு, டீசல் விலையில் 4 ரூபாய் குறைத்துவிடுவோம்.

அதே போன்று வயதான 70 வயதானவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம், நீட் தேர்வை உடனே ரத்து பண்ணிவிடுவோம். இப்படி எல்லாவிதமான வாக்குறுதியையும் கொடுத்துவிட்டு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சிக்கு வந்து 150 நாட்களில் ஒரு முக்கியமான வாக்குறுதி என்ன ? 100 நாட்களில் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என சொன்னார்களா ?

தேர்தல் வாக்குறுதியில் சொல்லிட்டு அந்த நிறைவேற்றுவதுக்காகவே ஒரு துறை உருவாக்குவோம் என்று கூறினார்கள். எந்த துறை உருவாக்கினார்கள் ? எந்த துறையும் உருவாக்கவில்லை. அதன்பிறகு என்ன சொன்னார்கள்  துறை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அதற்கென்று ஒரு ஆய்வு செய்து பொதுமக்கள் மத்தியில் ஒரு டாக்குமென்ட் ப்ரெசன்ட் பண்ணுவோம்.

என்னவெல்லாம் செய்தோம் எதையெல்லாம் செய்யவில்லை என நாம்  ப்ரெசன்ட் பண்ணுவோம். இப்பொழுது எதுவுமே காணவில்லை வெறுமனே ஒரு போலியான அரசாங்கம் இன்றைக்கு மக்களை ஏமாற்றுகின்ற வஞ்சிக்கின்ற அரசாங்கம் அதுதான் இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விளம்பர அரசாங்கம் என விமர்சித்தார்.

Categories

Tech |