குடியிருப்பு பகுதியில் வன விலங்குகள் நடமாடுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகில் இருக்கும் கரிமரா அட்டி குடியிருப்பு பகுதியை சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 3 கரடிகள் மற்றும் 2 சிறுத்தை புலிகள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் சாலைகளில் உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது சில நேரங்களில் மட்டுமே வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும். ஆனால் தற்போது அடிக்கடி எங்கள் குடியிருப்பு பகுதிக்குள் வன விலங்குகள் நடமாடுவதால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.