Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே விளையாட்டு தானா…. மாணவனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

திருப்பூர் மாவட்டம் புளியம்பட்டி பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் பெரிய புதூரில் சலாவுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள்,1 மகள் என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மூத்தமகன் சல்மான் பாசித் 8 – ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் தனது குடும்பத்தினருடன் சல்மான் பாசித் புளியம்பட்டியில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்ற சல்மான் பாசித் நீச்சல் தெரியாத காரணத்தினால் மெதுமெதுவாக தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இவரை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் கோபி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சல்மான் பாசித்தை காப்பாற்ற முயன்ற போதும், அவரின் சடலம் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது. அப்போது சல்மான் பாசித்தின் சடலத்தை கண்ட  உறவினர்கள் கதறி அழுதனர்.  இத் தகவலறிந்த பங்களாபுதூர் காவல்துறையினர் விரைந்து வந்து சல்மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Categories

Tech |