மழைநீர் கடலில் வீணாகக் கலப்பதை தடுக்க நிபுணர் குழுவை அமைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திரநாத் கார்த்திக் தாக்கல் செய்த மனுவில், நிலத்தடி நீர் மேலாண்மை இல்லாதததால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும், அதிகப்படியான நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இந்த பிரச்சனை தீவிரமானது என்றும், நிபுணர்களை கலந்தாலோசித்தால் இந்த விவகாரம் சிறப்பாகக் கையாளப்படும் என்றும் சுட்டிக்காட்டி, மனு மீது, வரும் 18-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.