Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாமே Duplicate…! 50 பவுன் நகைகளை அடகு வைத்து “ரூ.13 1/2 லட்சம் மோசடி”…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பஜார் வீதியில் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நெடும்புலி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், கொசத் தெருவை சேர்ந்த அஜித் ஆகிய இருவரும் நிதி நிறுவனத்தில் 50 பவுன் நகைகளை அடகு வைத்து 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து நிதி நிறுவன புதிய மேலாளர் அன்பரசு அடகு நகைகள் குறித்து ஆய்வு செய்தபோது அஜித், பிரகாஷ் ஆகிய இருவரும் அடமானம் வைத்த நகைகள் முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது. இருவரும் மீதும் நிதி நிறுவன மேலாளர் அன்பரசு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அஜித் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |