மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் பள்ளிகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தோட்டப்பாளையம் அரசு பெண்கள் பள்ளி, காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். அப்போது மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், 2-ஆம் மண்டல இளநிலை பொறியாளர் மணிவண்ணன், ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அனைத்து பள்ளிகளிலும் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.