அறிஞர் அண்ணாவின் 53 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அதில் அவர் கூறியதாவது, 1967 ஆம் ஆண்டு நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு தமிழகத்தை தாழ்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் அமர்ந்த எம்ஜிஆர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி தமிழகத்தை தலைநிமிரச் செய்தார். திமுக தலைவராக மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மக்களை திசை திருப்பும் நோக்கில் இதுபோன்ற சில யுத்திகளை கையாண்டு வருகிறார்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உருவாக்கினார். அதேபோல பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடு எம்ஜிஆர் காலத்தில் தான் உருவாக்கப்பட்டது. இவ்வாறாக சமூக நிதி தொடர்பான கருத்துக்களுக்கு வித்திட்டவர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தான். திமுக ஆட்சியில் தற்போது பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதில் இருந்து மக்களை திசை திருப்பும் நோக்கில் தான் சமூக நிதி அமைப்பு என முதல்வரும் நானும் தமிழன் தான் என ராகுல் காந்தியும் கூறிக்கொண்டு வருகின்றனர். ராகுல் காந்திக்கு தமிழன் என்று கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.” இவ்வாறு அவர் கூறினார்.