சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து குறித்து சமந்தாவின் தந்தை உருக்கமாக பதிலளித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017 -ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணமாகி 4 ஆண்டுகளே ஆகும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சமந்தா, நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.
இதுகுறித்து நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா ‘இது துரதிர்ஷ்டவசமான ஒன்று. அதேசமயம் இது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு ‘என் மகளின் திருமண முறிவு எதிர்பார்க்காத ஒன்று. விவாகரத்து குறித்து கேள்விப்பட்டதும் என் மனம் சிறிது நேரம் செயலற்றுப் போய்விட்டது. எல்லாம் சில நாட்களில் சரியாகிவிடும் என நினைத்தேன் . ஆனால் சரியாக வில்லை’ என உருக்கமாக கூறியுள்ளார்.