நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் நுண் பார்வையாளர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்து வாக்கு என்னும் பணி நடைபெற உள்ளது. இதனையடுத்து 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8. 30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும்.
இந்த பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பார்வையாளராக கோபால் ராம் பிர்டா, அனிதா, ஷோபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நுண் பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கலெக்டர் மெகராஜ் விளக்கி கூறினார்.