Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா?…. அதிரடி ஆய்வு செய்த தேசிய தர மதிப்பீட்டு குழு…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் அதிகாரிகள்  ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக்குழு ஆய்வு செய்தது. இதில் ஆய்வு குழு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில்  தேசிய தர மதிப்பீட்டுக்குழு கல்லூரியில் அமைந்துள்ள அனைத்து துறைகள் மற்றும் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து  நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் , மாணவ-மாணவிகள், மாணவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது  கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி  கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்  பற்றி எடுத்துரைத்துள்ளார். மேலும் டாகடர் சாகிர் உசேன் கல்லூரியில் தேசிய தர மதிப்பிட்டு குழு 4-வது முறையாக ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |