மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையை நேற்று மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி அதிரடியாக ஆய்வு செய்தார். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர். மணி, மருத்துவர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த பரிசோதனை மையம், மருந்து வழங்கும் அறை உள்ளிட்ட பிரிவுகளை ஆய்வு செய்தார்.
அதன் பிறகு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருந்துகளை பார்வையிட்டார். மேலும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் முறை மற்றும் கவனிப்பு குறித்து கேட்டு அறிந்துள்ளார்.