கூடுதல் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாங்குறிச்சி ஊராட்சி அலுவலக கட்டுமான பணி, புள்ளூர் தடுப்பணை கட்டும் பணி, ம.கொத்துர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு குழாய் வழங்கும் பணி, உறிஞ்சி குழாய் அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதில் வட்டார வளர்ச்சி அதிகாரி சண்முகம் சிவகாமி, தண்டபாணி, இன்ஜினியர் சண்முகம், மணிவேல், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் கட்டுமான பொருட்களின் தரம், எப்படி பணிகள் நடைபெறுகிறது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளார்.