Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாம் தயாரா இருக்கு..! தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி காரைக்குடி, சிவகங்கையில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா நோயாளிகளுக்கு 500 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று நிருபர்களிடம் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது இன்னும் ஒரு வார காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பயன்பாட்டிற்கு வந்து விடும். தற்போது 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ஆக்சிஜன் சிலிண்டர் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அதன்மூலம் நோயாளிகளுக்கு 50 படுக்கை வசதிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது அரசு மருத்துவமனையில் 1137 நபர்களுக்கும், தனியார் மருத்துவமனையில் 247 நபர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிருபர்களிடம் கூறியுள்ளார்.

Categories

Tech |