Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாம் தயாரா இருக்கு… தேர்தலுக்கு முந்தைய நாள் வந்து சேரும்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கையில் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்துவதற்காக 15 வகையான பொருட்கள் தயார் நிலையில் எடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிக்கு தேவையான பொருள்கள், வாக்கு பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். அதனை நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 1,679 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளது. இந்த வாக்குப்பதிவு மையங்களுகளில் வாக்காளர்களுக்கு பயன்படுத்தும் அடையாள மை, அலுவலக பயன்பாட்டிற்கான கவர்கள், எழுது பொருள்கள், படிவங்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அடையாள அட்டை, வழிகாட்டி பதிவேடுகள் உள்ளிட்ட 15 வகையான பொருட்கள் தயார் நிலையில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கையுறை, முககவசம், கிருமிநாசினி, மருந்துகள் ஆகியவை தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி ஒவ்வொரு மையத்திற்கும் அனுப்புவதற்காக தயார் நிலையில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முன்தினம் அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரமேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராம்குமார், கண்காணிப்பு பிரிவு அலுவலர் சசிகுமார் மற்றும் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Categories

Tech |