Categories
தேசிய செய்திகள்

எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது…. கண்புரை அறுவை சிகிச்சை செய்த ஜனாதிபதி…. வெளியான தகவல்….!!!!!

 ஜனாதிபதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரவபதி முர்மு கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி பதவியேற்றார். இவருக்கு தற்போது 64 வயது ஆகிறது. இவர் கடந்த மாதம் 16-ஆம் தேதி தனது இடது கண்ணில் கண் புரை அறுவகை சிகிச்சை செய்து கொண்டார். அதேபோல் தற்போது தனது வலது கண்ணிலும் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இதுகுறித்து  அறிக்கை ஒன்றை வெளியிடப்படுள்ளது. அதில் இந்திய ஜனாதிபதி இன்று  புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தனது வலது கண்ணில் கண் புரை அறுவகை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக முடிந்தது.  பின்னர்  மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றார் என கூறியுள்ளார்.

Categories

Tech |