Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் நிலையங்களும் பயிற்சி கொடுங்கள்…. அரசு அதிகாரியின் அதிரடி உத்தரவு…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டையில் கொரோனா வார்டினுள் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுப்பது குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கொரோனா வார்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் 18 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டினுடைய தீயணைப்பு துறையின் இயக்குனரான சைலேந்திரபாபு கொரோனா வார்டுகளில் துர்திஸ்டவசமாக தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பது குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அனைத்து தீயணைப்பு நிலையத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் ராணிப்பேட்டை மாவட்டத்திலிருக்கும் தீயணைப்பு துறையின் சார்பாக தனியார் மருத்துவமனை ஒன்றில் இந்நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டனர். அதில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து நடைபெற்றால் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், தீயணைப்பு சாமான்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளனர்.

Categories

Tech |