Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எல்லாம் பாதுகாப்பாக உள்ளதா..? வாக்கு எண்ணும் மையத்தில்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் ஏ.வி.சி. கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் ஏ.வி.சி. கல்லூரியில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதை நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன் நாயர் இந்த வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலன்று பதிவான வாக்குகள் அனைத்தும் இந்த வாக்கு எண்ணும் மையத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 அடுக்கு பாதுகாப்பும் இந்த மையத்தில் போடப்பட்டுள்ளது. மேலும் அனுமதி பாஸ் பெற்றவர்கள் மட்டுமே இந்த வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஷிப்ட் கணக்கில் ஒரு வேட்பாளருக்கு முகவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு ஒருவர் மட்டுமே இங்கு தங்க முடியும் என்றார்.

Categories

Tech |