செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, சுமார் சிட்டியில் சாதனை செய்துள்ளது எடப்பாடி அரசு சொன்னது எடப்பாடி பழனிசாமி. இப்போ, நீங்களே முழங்கால் தண்ணீரிலே போய்க் கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவு பணம் என்ன சார் ஆச்சு ? எனக்கு என்னுடைய ஆசையெல்லாம் சேலத்தில் உட்கார்ந்து சொல்வதெல்லாம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் ? உயர்நீதிமன்றம் பல கேள்விகளைக் கேட்டது, ஷோமோட்டோவை மறுபடியும் எடுத்து இந்த பணமெல்லாம் எங்கே போச்சு என்பது தான் என்னுடைய கேள்வி. எவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டது, ?
மக்களுக்கு இந்த பணம் செலவே செய்யப்படவில்லை. இந்த பணம் இதில் இருக்கிற முன்னாள் மாநகராட்சி கமிஷனர் அது யாராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை, எல்லா பொறியாளர்களும் எல்லாம் பிராடு, லுட்டட் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ, சென்னை பெயரை சொல்லி, மக்கள் பெயரை சொல்லி, டிரைனேஜ் சிஸ்டத்தை சரி பண்றேன், ஸ்மார்ட் சிட்டி கொண்டு வரேன் என்று சொல்லிவிட்டு இந்த மாதிரி செய்தால், அந்த மக்களுடைய நிலைமையை நினைத்துப் பாருங்கள், டெங்கு பரவுது, தண்ணீர் வீட்டில் போய் வெளியே வர மாட்டேங்குது, மோட்டாரை தூக்கி கொண்டு கவர்மெண்ட் போகுது.
முதல்நாள் ஸ்டார்ட் ஆனவுடனே மறுநாள் வந்து கேட்கிறார் திமுக அரசு சரியாக செயல்படவில்லை, சொல்றீங்க… ஒரு நாள் தான் மழை பெய்திருக்கிறது, அடுத்தநாள் வந்து சொல்கிறார் திமுக அரசு சரியாக செயல்படவில்லை. என்ன செயல்படுவது ? பணத்தை எல்லாம் நீங்க அடிச்சிட்டு போயிட்டீங்க, யார் செயல்படுத்தனும் புரியல எனக்கு, அவங்க வந்து 4, 5 மாசம் தான் ஆச்சு 2, 3 மாதம் கொரோனால போச்சு, இப்ப தான் நிதி ஒதுக்கி ஒவ்வொரு வேலையா செய்து கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்தார்.