மதுரையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து தொகுதிகளுக்கும் சின்னம் பொருத்துவதற்காக வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைத்ததுள்ளது. இந்த நிலையில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
அதாவது திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் 24 கட்சி வேட்பாளர்களின் சின்னங்களையும், ஒரு நோட்டா வையும் சேர்த்து மொத்தமாக 25 சின்னங்கள் பொருத்தப்பட்டது. இப்பணியில் பல முக்கிய அரசுத் துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.