கொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் 3-ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில் அரசின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் 3-ஆம் அலையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு சிகிச்சை நல மையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வடவீரநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், தப்புக்குண்டு, கோம்பை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகள், உத்தமபாளையம் சின்னமனூர் அரசு மருத்துவமனைகள் ஆகிய இடங்களுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே தொற்று அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார். மேலும் போடி அருகே நடக்கும் வார சந்தையில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் உடன் இருந்துள்ளனர்.