பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை வழக்கில் முக்கோண நாடகம் நடப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி இருந்தது. இதன் மீது 28மாதங்களாக எந்த நகர்வும் இல்லாத நிலையில் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றதில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் 7பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை குடியரசு தலைவருக்கு இருப்பதாக தமிழக ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆளுநரின் இந்த முடிவு தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
இதுகுறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தன்னுடைய பொறுப்பை அவர் தட்டிக் கழித்திருக்கிறார். இருபத்தி எட்டு மாதங்களாக தமிழக அரசின் பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பல்வேறு சாக்குப் போக்குகளை கூறி வந்துள்ளார். ஆளுநர் தொடக்கத்தில் எம்.பி.எம்.ஏ ரிபோட் கேட்டிருக்கிறோம். அதன்பின்னர் முடிவு எடுக்கிறோம் என்றும் சொல்லியிருந்தார்.
மைய அரசே அது பொருத்தமில்லாதது என்று கருத்து சொன்ன பிறகு, தற்பொழுது இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருக்கிறார். இது கவர்னருக்குரிய அதிகாரத்தை தட்டிக் கழித்தது மட்டுமின்றி மாநில அரசிற்கு உரிய அதிகாரத்தையும் மீறியதாக தெரிகிறது அல்லது பறித்ததாக தெரிகிறது.
தமிழக அரசு, மத்திய அரசு , உச்சநீதிமன்றம் என்று முக்கோணத்தில் நடந்து கொண்டிருக்கிற ஒரு நாடகமாக தெரிகின்றது. தமிழக முதல்வர் கடந்த முப்பதாம் தேதி ஆளுநரை சந்தித்தபொழுது பேரறிவாளன் வழக்கு தொடர்பாக வழக்கு தொடர்பாக ஆளுநர் நல்ல ஒரு முடிவெடுப்பார் என்று கூறினார். அதன் பின்னர் சட்டப்பேரவையிலும் கூறியிருக்கிறார்.
ஆனால் 25ம் தேதியே ஆளுநர் முடிவு எடுத்து மத்திய அரசிற்கு கடிதம் எழுதியதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரியவருகிறது. ஆளுநர் முதலமைச்சரிடம் உண்மையை மறைத்ததார ? அல்லது முதலமைச்சர் உண்மையை தெரிந்தும் வேண்டுமென்றே நாடகமாடினாரா ? என்ற கேள்வி எழுகிறது என திருமாவளவன் கேள்வி எழுப்பினர்.