Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருமே ஏற்றுக்கொண்டார்கள்…! முதல்வர் எப்பவும் மாஸ்… 3ஆவது முறை எங்க ஆட்சி தான் …!!

சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அமைவது உறுதி என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்டம், கோவை புறநகர் வடக்கு மாவட்டம், கோவை மாநகர் மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகள் கூட்டம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா, கனமழையால் கவலை அடைந்துள்ள மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நோக்கில், 2 ஆயிரத்து 500 ரூபாயுடன் பொங்கல் சிறப்பு தொகுப்பை முதலமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

சிறுபான்மையினர் உட்பட அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும், தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது உட்பட அரசின் என்னற்ற திட்டங்களையும், சாதனைகளையும் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |