Categories
மாநில செய்திகள்

எல்லாருமே ஒரே மாதிரி எழுதி இருக்காங்க…. மிரள வைத்த தமிழக கல்லூரி புள்ளிங்கோ…. செமஸ்டர் தேர்வு அலப்பறைகள் …!!

ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களில் ஒரே மாதிரி பதில் இருந்ததால் மதிப்பீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

கொரோனா பரவ  தொடங்கியதால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக ஆன்லைன் மூலம் மாணவர்கள் தனியாக தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களை வீட்டிலிருந்தே தேர்வை எழுதி விடைத்தாள்களை கல்லூரிக்கு அனுப்ப அறிவுறுத்தியது.

அவ்வாறு மாணவர்கள் எழுதி அனுப்பிய விடைத்தாள்களை ஆசிரியர்கள் ஆராய்ந்தபோது பலரது விடைகள் ஒரே மாதிரி இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் மாணவர்கள் குழுவாக சேர்ந்து நண்பர்களின் வீடு அல்லது பொது இடம் போன்ற இடங்களில் வைத்து ஒன்றாக தேர்வு எழுதியது தெரியவந்தது. இது தொடர்பாக கல்லூரிகளும் தங்கள் தரப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதோடு நடவடிக்கை எடுக்கும் விதமாக ஒரே மாதிரி விடைகள் எழுதப்பட்டிருந்த விடைத்தாள்களை தனியாகப் பிரித்து அதற்கு மதிப்பீடு போடுவதை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |