Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருமே சமம் தானே…. விஜய் சொல்லிட்டு போறாரு…! கோபத்தில் தமிழக பாஜக ?

தமிழகத்தில் விஐபி தரிசனம் இருக்க கூடாது, இது இருப்பது பாஜகவிற்கு கோபம் தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கவர்னரை குறை கூற வேண்டுமென்றால் அவரால் பாயிண்ட்டாக பேச முடியவில்லையே…. இனிமே AK ராஜன் கமிட்டி சரி என்று அவரால் சொல்ல முடியலையே…. இந்த தடவை வந்திருக்கும் ரிசல்ட்டை  பார்க்கும் போது தமிழகம் நன்றாக செய்கின்றது என்று தெரிகிறது…

தமிழக மாணவர்கள் நீட் எக்ஸாம் பெயில் ஆக வேண்டும் என்று முதலமைச்சர்  திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கின்றார். பேசுபவர்கள் எல்லாம் உத்தமர்கள், அவர்களுடைய ஜனநாயகத்தை பார்த்துவிட்டு கவர்னர் கேள்வி கேட்டார்  என்றால், கவர்னர் சரியில்லை என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

தமிழ்நாட்டில் 4 லட்சம் கோயில் இருக்கிறது. இந்த கோவிலின் முதல் முறையாக ஒரு திட்டத்தை போடுவோம். விஐபி தரிசனம் கிடையாது,  ஆண்டவன் முன் அனைவரும் சமமாக  தான் போகவேண்டும். வரிசையில் தான் போடவேண்டும் போக வேண்டும். அது மாநில முதலமைச்சராக இருந்தாலும் சரி, மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரி,  அப்படி செய்தீர்கள் என்றால்…. நீங்கள் இந்து கோயிலுக்கு ஏதோ செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

நான் சவால் செய்கின்றேன். தமிழகத்தில் விஐபி தரிசனத்தை  எடுக்க வேண்டும். அது எங்களுக்கும் கோபம் தான். அதை எடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் துணை நிற்கின்றோம். விஜய் அண்ணன் பீஸ்ட் படத்தில் இதைச் சொல்லி விட்டார். சொன்னா சொல்லட்டும்ங்க. அதுக்கும் பிஜேபிக்கு என்னங்க சம்பந்தம்.  அதை ஏன் காங்கிரஸிடம் கேட்க மாட்டேங்குறீங்க. ஏன்  டிஎம்கேவிடம்  மாட்டேங்கறீங்க என தெரிவித்தார்.

Categories

Tech |