தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக, வசூல் மன்னனாக பெரும்பாலான ரசிகர்களை கொண்டவர் தான் தளபதி விஜய். இவருடைய தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவார். இவர் தமிழில் முன்னணி ஹீரோக்களை வைத்து பெரும்பாலான வெற்றித் திரைப்படங்களை இயக்கி உள்ளார். அண்மையில் அவர் ஒரு பேட்டியில், நடிகர் அஜித் குறித்த தகவலை பகிர்ந்து உள்ளார். அதாவது, அஜித் மற்றும் விஜய் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதேபோன்று அஜித்தின் மனைவி ஷாலினியும் விஜய் குடும்பத்துக்கு மிகவும் நெருங்கிய பழக்கம் உடையவர் ஆவார்.
அந்நட்பின் அடிப்படையில் அவர்கள் இரு குடும்பங்களும் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் மாறி மாறி சென்று வருவது வழக்கம் ஆகும். அதேபோன்று ஒரு நாள் சந்திரசேகர், அஜித்தை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரை ஷாலினி வரவேற்று உபசரித்துள்ளார். அதன்பின் வீட்டிற்கு வந்த அஜித், சந்திர சேகரின் பக்கத்கில் உட்கார்ந்து கொண்டு சினிமா குறித்த பல்வேறு விஷயங்களை கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக பேசியிருக்கிறார். அப்போது அஜித் சினிமா உலகில் நாணயமாணவர்கள் கிடையாது, யாரையும் நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு சந்திரசேகர் சினிமாவில் நாணயமாணவர்கள் எல்லாம் இருந்தார்கள் என்றும் இப்போது யாரும் கிடையாது அது ஒரு கோல்டன் பீரியட் காலம் என்றும் தெரிவித்தார். தற்போது உங்கள் தலைமுறையில் அப்படி ஒருவாறு இல்லை என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அஜித் கூறுவதை கேட்கும்போது நேர்மையாக, உண்மையாக அஜித் இருப்பதுபோல் சினிமாவில் அனைவரும் இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுவது தெரிகிறது. ஆகவே அன்று ஒரு நாள் சந்திப்பின்போது நடைபெற்ற நிகழ்வுகளை சொல்லிய சந்திர சேகர், மீண்டும் அவரை பார்க்கும் வாய்ப்பானது கிடைக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.