ட்ரம்ப் பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் தற்போது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியை தழுவியுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு மட்டும் அதிபராக இருக்கும் ட்ரம்ப் தற்போது பல்வேறு நாடுகளில் உள்ள தங்களது அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஆப்கானிஸ்தானிலிருந்து 4500 – 2500 ராணுவ வீரர்களையும், ஜனவரி 15-ஆம் தேதிக்குள் ஈராக்கிலிருந்து தனது இராணுவ படைகளையும் திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் இந்த தீர்மானம் தவறானது என்று பிரிட்டனின் முன்னாள் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.