மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சாலையோரங்களில் குளிர்பான கடைகள் தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனடிப்படையில் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 107° எட்டியுள்ளது. இதனால் சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனரான நா.புவியரசன் பொதுமக்களை மதியம் 12 மணி முதலாக 4 மணி வரையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெயிலிற்குள் அதிகமாக செல்ல வேண்டாம் என்று கூறினார்.
மேலும் உடலில் நீரின் அளவு குறையாமலிருக்க அடிக்கடி நீர் அருந்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். இதனிடையே மதுரையில் மக்கள் பயன்பெறும் வகையில் வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பான கடைகள் சாலையோரங்களில் அரசின் அனுமதியோடு தனிநபர்கள் தொடங்கியுள்ளார்கள்.