Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாரும் ஓட்டு போட்டுருங்க..! ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு… போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செந்துறையில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செந்துறையில் வாக்காளர்கள் எந்த வித அச்சமும் இன்றி 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறை மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா முரளி இந்த அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார். அவருடைய தலைமையில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் ஊர்வலமாக சென்றனர். இந்த அணிவகுப்பு செந்துறை சந்தைப்பேட்டையில் தொடங்கி போஸ்ட் ஆபீஸ் நகர், குரும்பபட்டி காலனி, பாத்திமா நகர், நேதாஜி நகர் வழியாக சென்று மறுபடியும் சந்தைப்பேட்டையில் வந்து முடிவடைந்தது.

Categories

Tech |