அதிமுகவை காப்பாற்றுவேம் என பிப்ரவரி 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி உறுதி எடுக்குமாறு கட்சியினருக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அந்த கொண்டாட்டத்திற்காக அதிமுகவின் தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒருசேர ஒரு முக்கியமான கடிதத்தை எழுதி இருக்கிறார்கள். அதாவது, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் விசுவாச தொண்டர்களுக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பிட்ட அந்த கடிதமானது எழுதப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா அவர்கள் மண்ணுலகை விட்டு பிரிந்தாலும், அவரது புனித ஆத்மா ஒவ்வொரு நாளும் நம்முடைய செயல்களை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் நம்புகின்றோம். அவர் உழைப்பாலும், தியாகத்தாலும் ஊட்டி வளர்த்த இந்த இயக்கத்துக்கு நன்மை செய்வோம். தீங்கு செய்ய நினைப்போரை அறத்தின் வழியில் நின்று அழித்து, ஒழித்து அம்மாவின் இயக்கத்தை காப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.
கழக கண்மணிகள் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் என்னவென்றால் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி இமைபோல் காத்தத கடவுள் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று அம்மாவை நினைத்துக் கொண்டு, உங்கள் வீடுகளில் மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். கண்களை மூடி உள்நோக்கி பார்த்து புரட்சி தலைவி பிறந்தநாளில் கீழ்க்கண்ட உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று அதிமுக தலைமை சார்பில் சொல்லி இருக்கிறார்கள்.
உயிர் மூச்சு உள்ளவரை ஜெயலலிதா வழியில் மக்களையும், மக்களுக்காக அண்ணா திமுக இயக்கத்தையும் காப்போம். இது அம்மா மீது ஆணை என்று உறுதி ஏற்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சுட்டிக் கட்டப்பட்டு இருக்கின்றது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மிக முக்கியமாக இந்த அறிவிப்பை அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். சசிகலா சிறையில் இருந்து வெளி வந்த பிறகு பெரிய மாற்றம் வரும் என்று சொல்லப்பட்டது. அவர் தொடர்ச்சியாக அவர் அமைதியாக இருந்து வரும் சூழ்நிலையில் இப்படி ஒரு அறிக்கையை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கிறார்கள்.