Categories
உலக செய்திகள்

“எல்லாரும் தடுப்பூசி” போட்டுக்கோங்க… அதிகரிக்கும் இறப்பு… பீதியில் மக்கள்…. அழைப்பு விடுத்த “ஜோ பைடன்”….!!

அமெரிக்காவில் கொரோனாவால் 9,00,000 த்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த ஓமிக்ரான் தொற்றால் அமெரிக்காவிலுள்ள 35 மாநிலங்களிலும் இறப்பு விகிதம் அதிகமாகவுள்ளது. மேலும் அமெரிக்காவில் ஒரு நாளைக்கு மட்டும் 5 லட்சம் பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள அந்நாட்டின் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் கட்டாயமாக பூஸ்டர் டோஸ்ஸை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,00,000 த்தையும் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |