Categories
உலக செய்திகள்

எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கோங்க..! மரணப்படுக்கையில் இருந்த பிரித்தானியர் உருக்கம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரித்தானியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருந்தபோது பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கெஞ்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள பிளாக்பர்ன் என்ற பகுதியில் வசித்து வந்த Brian Lynch (46) என்பவர் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் இருந்ததால் பிறகு போட்டுக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 7-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் Brian Lynch ராயல் பிளாக்பர்ன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட Brian Lynch சிகிச்சை முடிந்து குணமடைந்ததும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், என்னுடைய நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்றும் சமூக ஊடகத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து கடந்த ஜூலை 31-ஆம் தேதி அவர் கோமா நிலைக்கு சென்ற நிலையில் கொரோனாவிலிருந்து மீளாமல் உயிரிழந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் Brian Lynch ஜூலை 7-ஆம் தேதி அன்று வயதானவர்களை மட்டும் தான் கொரோனா அதிகம் தாக்கும் என்ற எண்ணத்தில் இருந்தேன் என்று சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேசமயம் மூச்சு விடவும் முடியாமல், இருமலுடன் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |