சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் கொரோனா தடுப்பூசியான கோவிட் ஷீல்டு தடுப்பூசியை 100-க்கும் மேற்பட்டோர் போட்டுக்கொண்டனர். இந்த சிறப்பு முகாமை சாலைகிராமம் அரசு மருத்துவமனையில் நடமாடும் மருத்துவ குழுவினர் நடத்தியுள்ளனர்.
மேலும் சாலைகிராமம் அரசு மருத்துவர்கள், அலுவலக பணியாளர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என அனைவரும் கொரோனா தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ளும்படி வலியுறுத்திப் பேசினர். அந்த முகாமின் போது இளையான்குடி பேரூராட்சி அலுவலர்கள், செயல் அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.