வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இடஒதுக்கீடு ரத்து குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், வேறு எந்த சமுதாயத்திற்கும் இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பது அல்ல எங்களுடைய நோக்கம். எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கும் பட்சத்தில் அது பொதுவானதாக இருக்கவேண்டும். சமமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். எல்லா மக்களும் பயனடைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் வழங்குவது என்பது நல்ல ஒரு சமூக நீதிக்கான அழகு இல்லை.
இவை எந்த விதத்தில் சமூக நீதியாக இருக்கும். படிதவர்கள் அனைவரும் பார்த்து கொண்டு இருக்குறீர்கள். நீங்கள் அனைவரும் கூறுங்கள். நாம் யார் ஒருவருக்கும் எதிரானவர்கள் இல்லை. எங்களை பொறுத்தவரை எங்களுடைய சமூகத்திலேயே பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கணக்கெடுப்பு நடத்தி இன்னும் பலபேர் இருக்கிறார்கள். ஏற்கனவே இருந்த சமூகத்தில் இருந்து மொத்தமாக சீர்மரபினர் பட்டியலில் இருந்து ஒரு சமூகத்தை மட்டும் பிரித்துக் கொடுக்கிறது எந்தவிதத்தில் சமூகநீதியாக இருக்க முடியும் .
68% சமூகத்தில் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவர்களுடைய நிலைமையை சிந்தித்து பாருங்கள். இது சமூக நீதிக்கான நியாயமான கோரிக்கைதான். ஒருத்தரை மட்டும் நன்றாக இருக்க வேண்டும். மற்றவர்களெல்லாம் நாசமாக போகணும் என்று நினைத்தால் அது எப்படி நல்ல ஒரு அரசாக இருக்க முடியும் என தெரிவித்தார்.