Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லாரும் பாக்குறாங்க… உலகிற்க்கே நம்பிக்கை…! இந்தியா தான்… மத்திய அமைச்சர் பெருமிதம் ..!!

மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகின்றார். அப்போது பேசிய அவர், தற்போது நான் மத்திய பட்ஜெட்டை அறிவிக்க போகிறேன். இதற்கு முந்தைய காலகட்டங்களை விட மோசமான சூழலில் இந்த பட்ஜெட்டை நாம் தாக்கல் செய்கிறோம். நான் கடந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்த போது கொரோனா போன்ற ஒரு மோசமான நிகழ்வு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவைப் போலவே உலக அளவிலும் பலரும் கொரோனவால்  பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உறவுகளை இழந்துள்ளனர்.

அப்போது பல விதமான நிதி உதவிகள் அறிவிக்கப்பட்டன. பிரதமர் அந்த நிதி உதவிகளை அறிவித்தார். சுமார் 800 மில்லியன் மக்களுக்கு உதவி அளிக்கும் திட்டங்கள் வழங்கப்பட்டன. எரிசக்தி தொடர்பான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பெரும்பாலான மக்கள் கொரோனா காலத்தில் வீடுகளில் தங்கி இருந்தனர். காய்கறி விற்பவர்கள், தூய்மைப் பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், ராணுவம் எப்போதும்போல வேலைக்கு சென்றனர். இதை நாம் அங்கீகரிக்க வேண்டும். நான் என் மனமார்ந்த நன்றியை அவர்களுக்கு உரித்தாக்குகிறேன்.

அந்த முக்கியமான காலகட்டங்களில் அவர்களின் உழைப்பு நம் நாட்டிற்கு தேவையானதாக இருந்தது. எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அவர்களது சம்பளத்தை மக்களுக்காக கொடுத்தனர். 2 ஆத்ம நிற்பர் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளை அரசாங்கம் வெகு திறமையாக கையாள வேண்டும் என்று முடிவெடுத்தது. குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவி அளிக்கும் திட்டங்களை அரசு கொண்டு வந்தது. அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 5 மினி பட்ஜெட் அடங்கியிருந்தது போன்ற தோற்றம் இருந்தது.

சிறு குறு தொழில்கள், விவசாய துறைகள்,  தொழில் துறைகள் தனியார் மேம்படுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் அரசு உதவிகளை வழங்கியது. தற்போது இந்தியாவிற்கு இரண்டு தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. இந்தியாவில் இருந்துதான் கொரோனவுக்கான தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு உருவாக்கப்பட்டு, பல நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது நமது நாட்டிற்கு கிடைத்த பெருமை. தற்போது நினைவு கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று இன்றும் நாம் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம்.  கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் நமது அரசியல் சமூக மாற்றங்கள் மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது தற்போதும் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது.

Categories

Tech |