Categories
தேசிய செய்திகள்

எல்லாரும் போய்ட்டாங்க…. நீங்க ஒழுங்கா இருங்க…. உ.பி சிறுமி வீட்டிற்கு மிரட்டல்….. வைரலாகும் வீடியோ …!!

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று மாவட்ட நீதிபதி மிரட்டல் விடுத்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற ராகுல் காந்தி காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனிடையே சிறுமியின் குடும்பத்தினரை ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி நேரில் சென்று பார்த்ததோடு அவர்களுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார்.

இது காணொளியாக பதிவாகி சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. வெளியான காணொளியில் மாவட்ட நீதிபதியான பிரவீன் சிறுமியின் தந்தையிடம் இருந்த ஊடகத்தினரில் பாதி பேர் வெளியேறிவிட்டனர். மீதம் உள்ளவர்களும் புறப்பட்டு விடுவார்கள். நாங்கள் தான் நிலைத்து இருப்போம். இந்த சம்பவம் பற்றிய அறிக்கையை நீங்கள் மாற்றுகிறீர்களா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டும் என மறைமுகமாக மிரட்டியுள்ளார்.

ஏற்கனவே இறந்த சிறுமியின் முகத்தை குடும்பத்தினரிடம் கூட காட்டாமல் அவசரஅவசரமாக எரித்ததற்கு உத்தரபிரதேச காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நீதிபதி பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேராக சென்று மிரட்டியது அரசாங்கத்திற்கு நீதித்துறை கைக்கூலியா? பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக வாழ இந்தியா தகுதியற்ற நாடா? என்ற கேள்விகளை எழுப்ப செய்துள்ளது.

Categories

Tech |