Categories
சினிமா

“எல்லாரும் ரெயின் கோட்ட ரெடி பண்ணிக்கோங்க”…. அனிருத் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து வேதாளம், மான் கராத்தே, தானா சேர்ந்த கூட்டம், பீஸ்ட், எதிர்நீச்சல், கத்தி, மாரி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தன்னுடைய இசை திறமையின் மூலமாக பல்வேறு ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். தற்போது அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் தங்கள் ட்ரெயின்கோட்டை தயார் செய்து கொள்ளுமாறு அனிருத் கேட்டுக் கொண்டுள்ளார். அனிருத்தின் ” ஒன்ஸ் அப்பான் எ டைம்” இசை கச்சேரி நாளை கோவையில் நடைபெற உள்ளது. கனமழை காரணமாக அந்த கச்சேரி நடைபெறாது என செய்திகள் வெளியான நிலையில் நாளை எவ்வளவு மழை பெய்தாலும் திட்டமிட்டபடி இசை கச்சேரி நடைபெறும் என அனிருத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |