நாளை எல்லாரும் வீதிகளில் இறங்கி போராட வேண்டுமென பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு கடந்த மூன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வாக்கெடுப்பிற்கு முன் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான்கான் அதிபருக்கு பரிந்துரைத்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இதற்கிடையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் எதிராக வாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நாளை நாடாளுமன்றத்தின் மீதான நாளை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்ற நிலையில் பிரதமர் இம்ரான்கான் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். நாட்டு மக்கள் நாளை வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இறையாண்மையை கொண்டநாடான இந்தியாவிற்கு எந்த சந்தியும் கட்டளையிடுவது இல்லை