பள்ளிகள் திறப்பது பற்றி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக ஏன் கருத்து கேட்புக் கூட்டத்தை தமிழக அரசு நடத்தவில்லை என்று திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது, ” கொரோனா முழுமையாக குறைந்துவிட்டது என்று நிரூபிக்கப் படாத நிலையில் அவசர அவசரமாக நவம்பர் 16 முதல் பள்ளிகளை ஏன் திறக்க வேண்டும்? என்ற கேள்வி எழுப்பினேன். திமுக சொல்லியதால் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கவில்லை என்று கூறுவதற்கு தற்போது கண்துடைப்பு கருத்து கேட்பு நாடகத்தை தமிழக அரசு அரங்கேற்ற உள்ளது.
இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் பள்ளிகள் திறப்பது பற்றி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னர் செய்திருக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட வருவது அரசுக்குத் தெரியுமா? தெரியாதா? எல்லாவற்றையும் தலைகீழாக செய்வதுதான் அதிமுக அரசா?” என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.