Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லா இணைப்பும் துண்டிக்கப்படும்…. நிலுவையில் உள்ள வரி…. ஆணையர் விடுத்த எச்சரிக்கை….!!

நகராட்சியில் நிலுவையில் இருக்கும் வரி கட்டணத்தை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 2021-2022ஆம் நிதியாண்டில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, நகராட்சி கடை வாடகை, தொழில் உரிமக்கட்டணம், தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் கட்டண நிலுவை உள்ளிட்டவை உடனடியாக செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை நாமக்கல் நகராட்சி கணினி வசூல் மையம், மோகனூர் சாலை கணினி வசூல் மையம் மற்றும் கோட்டை சாலையில் உள்ள கணினி வசூல் மையங்களுக்கு சென்று செலுத்தலாம் என நகராட்சி ஆணையர் சுதா அறிவித்துள்ளார்.

மேலும் நகராட்சி கட்டணங்களை செலுத்தாமல் இருந்தால் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொதுமக்கள் நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டனர்.

Categories

Tech |