அரசு மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டுயுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மக்கள் அதிகமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் கூடுதலாக முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருக்கும் 375 படுக்கைகளில் 250 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதிகளுடன் உள்ளது. இதனை தொடர்ந்து கூடுதலாக 50 ஆக்ஸிஜன் படுக்கைகள் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுயுள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியுள்ளார். இந்த ஆய்வு மேற்கொள்ளும்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஜீவா, பொதுப்பணித் துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் போன்றோர் கலெக்டருடன் இருந்தனர்.