அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசிய விதம் குறித்து பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி புகழேந்தி, ஒரு மீட்டிங் போட்டு ஜோலி முடிஞ்சிடும், இங்கிருந்து போயிருவியா, டேய், ஏதோ வேலுமணி தப்பிச்சி மன்னிச்சி விட்டாரு அதனால ஓடிட்ட.. இல்லையென்றால் போவியா வரும்போது பார்த்தேன் ஒரு ரவுண்டு தான், ஐந்து ரூபாய்க்குக் கூட யோக்கியதை இல்லாத குடும்பம் உங்க குடும்பம் இன்றைக்கு எப்படி இவ்வளவு கோடி வந்தது, எங்கு கொள்ளையடித்தீர்கள், உங்க அப்பா திருட்டு ரயிலில் தானே வந்தாரு, உங்க தாத்தா யாரு ?
பெயர் எல்லாம் சொல்கிறார் லைனா, வேறு மாநிலத்திற்கு ஓடிரு, இங்கே இருக்காதே, ஆந்திராவிற்கு ஓடு, அந்தத் தொழிலை செய்கின்ற தொழில் கருவி பெயரெல்லாம் கூறி என்ன இதெல்லாம்? இது வந்து வேலுமணி என்ற அமைச்சர் முன்னாள் அமைச்சர் இதை ரசிக்கிறார்.அவருடைய தலைமையில் தான் இந்த கூட்டம் நடக்கிறது.
அதைவிடக் கொடுமை என்னவென்று கேட்டீர்கள் என்றால் இதில் பாதி தான் உங்களிடம் சொன்னேன்.. முஸ்லிம் போட்ருவாங்க என்கிறார். ரெக்கார்டு இருக்கு அப்டியே, இந்து முஸ்லிம் கலவரம் வரும் போட்டுருவோம் என்கிறார். யாராவது இப்படி எல்லாம் பேசுவார்களா ? ஈஸ்வர அல்லா தேரே நாம் என்றுதான் சொல்லிக் கொடுத்தார்களே ஒழிய முஸ்லீம், இந்துவை போடுவாங்க. இந்து, கிறிஸ்டீனை போடுவாங்க என்று சொல்லிக் கொடுக்கவில்லை.
எவ்வளவு மோசமான ஒரு மனிதர், நாக்கு எவ்வளவு மிகவும் மோசமான இருக்கிறது என்பதற்கு இந்த மனிதரை ஒரு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். அப்புறம் சொல்லிவிட்டு நீ எதுக்கு ஓடுன ? ஓட வேண்டியது ஸ்டாலினை அன்று சொன்ன ஆனா ஓடியது நீதானே கர்நாடகாவிற்கு…. அவரு ஓடவில்லையே, அவரு முதலமைச்சர் ஆகிவிட்டார். என்ன கிழித்துவிடுவ ஆறு மாசத்துல என்கிறார். ஒருமை வார்த்தைகள் அத்தனையும், இது சரியான ஒன்றல்ல. அதை சொல்லவே நாக்கு கூசுகிறது, நியாயமா இப்படியெல்லாம் பேசுவது ? இதைத்தான் நான் நினைத்திருந்தேன்.
ஆனால் இவருக்கு பெயில் பெட்டிஷன் போட்டு பெயில் கேட்கும்போது, அந்த பெயில் டிஸ்மிஸ் ஆகுது, சம்மன் இஸ்யூ ஆகுது, அதன் பிறகுதான் இவர் பயந்துகிட்டு ஓடுகிறார், பயந்துட்டு ஓடுன நபரை தேடி ஏழு போலீஸ் படை எனக்கு அதுதான் ரொம்ப வேதனை திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மேல…இப்படி ஒரு கோமாளியை பிடிப்பதற்கு இவ்வளவு படை. அப்படி எல்லாம் தேடித் போய் எப்படியோ பிடித்து விட்டாங்க, அப்ப பெயில் பெட்டிஷன் வரும்போது கமலஹாசன் ஒரு நடிகர். இந்தியா முழுவதும் தெரிந்தவர், அவர் ஒரு கட்சியினுடைய தலைவர் அவர் நாக்கை அறுத்து விடுவேன் என்கிறார்.
நியாயமா இது எங்கேயாவது கேள்விப்பட்டது உண்டா. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இதைச் சொல்லும்போது சொல்லியிருக்கனும் நாங்கள் தேடப்படுகின்ற குற்றவாளி என்று சொன்ன ராஜேந்திரபாலாஜியை அப்படியே விட்டால் கமலஹாசன் நாக்கை கட் பண்ணி விடுவார், நான் எங்க போகட்டும், நாக்குக்கு ஆபத்து, கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுகிறார் நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்து சொல்ல வேண்டுமா இல்லையா. வழக்கு முழுவதும் தோல்வி. இதெல்லாம் ஞாபகத்தில் இல்லை.
இது இப்பொழுது ஞாபகம் வருகிறது. ரொம்ப நாளைக்கு பின்னாடி ராஜேந்திரபாலாஜி பேசியது நியாபகம் வருகின்றது. கிரிமினல் குற்றசாட்டுகளை சொல்வதில் அளவு எல்லாம் கிடையாது, அது விஷயம் தெரியாதவர்கள் தான் சொல்வார்கள். இதை ஏன் இவ்வளவு நாட்கள் கழித்து சொல்கிறீர்கள் என்றால்…. என்னுடைய கவனத்திற்கு இப்பதான் வருது, இப்ப தான் பார்த்தேன் அந்த வலைதளங்களில், பெருசா போய்க்கொண்டிருக்கிறது…
இதே நியூஸ் ஆக இருக்கு. அதில் முதல்வரை திட்டினதை எடுத்து எடுத்து போட்டுட்டு இருக்கிறார்கள். இப்ப தான் முழுவதுமாக பார்த்தேன். ஏனென்றால் அதிமுக என்ற ஒரு ஒப்பற்ற தலைவி நடத்திய இயக்கத்தில் முட்டாள் பசங்க ஜாஸ்தி, எனக்கு தெரியும். இங்கே அமைச்சர்களாக இருந்தவர்கள் எல்லாம் ஒரு முக்கால்வாசி பேர் முட்டாள் பசங்க, குடிகாரர்கள் தான் எல்லாம். ஒருவர் தொடர்புகொண்டு உங்க அம்மாவை பாராட்ட வேண்டும் என்கிறார், அவர் வேறு கட்சியை சார்ந்தவர்.
ஏன் இப்பொழுது திடீரென இப்ப வந்து சொல்கிறீர்கள் என்று கேட்டேன், குறை சொல்லிட்டே இருப்பாரு, அவர் சொன்னார்…. இல்ல சார் உண்மையாகவே பாராட்ட வேண்டும். இப்படிப்பட்ட ஆட்கள் எல்லாம் வைத்து உங்க அம்மா மேய்த்திருக்கிறார்கள். இவங்க பேசும்போதுதான் தெரியுது இவர்களை எவ்வளவு கண்ட்ரோல் பண்ணி வைத்திருந்தார்கள் என்று. அதனால் உங்கள் அம்மாவை பாராட்ட வேண்டும் என்று சொல்கிறார்.
ஆக இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளோடு இருந்த இத்தனை பெரும் இப்போ ஒருவர் குடித்துவிட்டு உளறுகிறார், இன்னொருவர் உடை இல்லாமல் பக்கத்து வீட்டில போய் உட்கார்ந்து கொள்கிறார், என்ன இதெல்லாம் ? மலேசியாவிலிருந்து ஒரு பெண்ணை மூன்று தடவை கர்ப்பம் பண்ணிட்டேன் என்று அவர் மேல 6 ஐ.பி.சி., கன்விக்டட் ஆனவன் மாவட்ட செயலாளர். எவ்வளவு சொல்லிட்டு போக முடியும் நம்மளால, கட்சியா இதெல்லாம் ? ஆக என்னுடைய கவனத்திற்கு இதெல்லாம் இப்ப தான் வந்தது.
உச்சநீதிமன்றத்திற்கு இந்த தமிழக அரசு சொல்ல தவறிவிட்டது, அதற்கு தான் இதை ஞாபகப்படுத்தினேன். இப்படி எல்லாம் பேசியவர்களை எப்படி விட்டு வைத்திருக்கிறீர்கள். இன்னொரு வழக்கு போடுங்கள் சட்டத்தில் நிறைய இடம் இருக்கு, நிறைய புகார் இருக்குல்ல அவங்க மேல வழக்கு போடுங்க ஏன் வெளியில் ஓட விடுறீங்க என ஆவேசமாக புகழேந்தி விமர்சித்தார்.