Categories
தேசிய செய்திகள்

எல்லா குடும்பங்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்ய யோஜன என்ற திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் மேற்கு வங்கம்,டெல்லி மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது உலகின் மிகப்பெரிய அரசு நிதியில் இயங்கக் கூடிய மருத்துவ உதவி திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் கிடைக்கக்கூடிய பலன்களை நாடு முழுவதும் மாற்றிக்கொள்ள முடியும். இதில் பயனடைய குடும்பத்தின் அளவு, வயது மற்றும் பாலினம் ஆகிய அடிப்படைகள் எதுவும் தேவை இல்லை. மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இருதய நோய் உட்பட 26 பிரிவுகளில் 1669 மருத்துவ முறைகளுக்கு சிகிச்சை பெறலாம். மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் இந்த திட்டத்தின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். அந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை பிரீமிய தொகை pmk’s திட்டத்தில் இருந்து செலுத்தப்படும்.

Categories

Tech |